Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

இலங்கையில் வெளிநாடு செல்ல விரும்பும் அரசாங்க ஊழியர்கள் தொடர்பான வேலைத்திட்டம் துரிதப்படுத்தல்..!

 


அரச உத்தியோகத்தர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு அனுப்பும் வேலைத் திட்டத்தைத் துரிதப்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

அந்நிய செலாவணி வருமானத்தை அதிகரிப்பது, அரசு ஊழியர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு திறம்பட அனுப்பும் செயல்முறையைத் துரிதப்படுத்துவது, இதனுடன் தொடர்புள்ள நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அரச உத்தியோகத்தர்களை வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு அனுப்பும் முறைமையை, இலகுபடுத்தும் வகையில் 14/2022 ஆம் இலக்க அரச நிர்வாக சுற்றறிக்கையை திருத்துவது உட்பட 6 விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

Post a Comment

0 Comments