Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

கல்முனை அதிரடிப்படையினரால் காத்தான்குடியில் கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருள்!

 

ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றில் நேற்று (23) இரவு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கர்பலா வீதி அலியார் சந்தியில் வைத்து சந்தேக நபர் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலில் கைதானார்.

இவ்வாறு கைதான நபர் 37 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன் சந்தேக நபர் வசம் இருந்து ஐஸ் போதைப்பொருள் 5 கிராம் 10 மில்லிகிராம் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

பின்னர் கைது செய்யப்பட்ட நபர் சான்றுப் பொருட்களுடன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.



எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...

Post a Comment

0 Comments