Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

மின்சார சபை மறுசீரமைப்பு திட்டம் இரண்டு மாதங்களில் பாராளுமன்றுக்கு...!

 

அமைச்சர் கஞ்சன பாராளுமன்றில் நேற்று அறிவிப்பு

மின்சார சபை மறுசீரமைப்புத் திட்டம் இரண்டு மாதங்களில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின் சக்தி எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நட்டமீட்டும் நிறுவனத்தை லாபமீட்டும் நிறுவனமாக மாற்றும் நடவடிக்கையாக இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு செய்யப்படவுள்ளது என தெரிவித்த அமைச்சர், அது தொடர்பில் எட்டுப் பேர் கொண்ட விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் அறிக்கை விரைவில் கிடைக்கும் என்றும் தெரிவித்ததுடன் இரண்டு மாத காலத்தில் முழுமையான மறுசீரமைப்புத் திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் சபையில் தெரிவித்தார்.

மின்சார சபை மாதாந்தம் பில்லியன் கணக்கில் நட்டத்தை எதிர்நோக்கி வரும் தற்போதைய நிலையில் மின்சார கட்டணத்தை அதிகரிப்பது தவிர்க்க முடியாதது என்பதை சுட்டிக் காட்டிய அமைச்சர், சாதாரண மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையிலும் அத்துடன் அதிகளவு மின்சாரத்தை உபயோகிப்போருக்கு கணிசமான கட்டண அதிகரிப்பு என்ற வகையிலேயே கட்டண திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதையும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று மின்சார கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் எதிர்க்கட்சியினர் முன் வைத்த சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் கஞ்சன விஜேசேகர இவ்வாறு தெரிவித்தார்.

சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்:

நாட்டில் 14 இலட்சம் மக்கள் 0-30 அலகு மின்சாரத்தை மாதாந்தம் உபயோகித்து வருகின்றனர். அதற்கான கட்டணமாக இதுவரை 105 ரூபா மட்டுமே அறவிவிடப்பட்டு வந்துள்ளது. புதிய கட்டண திருத்தத்தின்படி அந்தத் தொகை தற்போது 360 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 31-60 அலகு மின்சாரத்தை உபயோகிப்போர் இதுவரை காலமும் மாதாந்தம் செலுத்தி வந்த 280 ரூபா கட்டணமே தற்போது 780 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, நாடளாவிய ரீதியில் உள்ள 48, 000 மதத் தலங்களில் 15,000 மதத்தலங்கள் 0-30 அலகு மின்சாரத்தை உபயோகித்து வருகின்றன. அத்தகைய மதத்தலங்கள் இதுவரை காலம் செலுத்தி வந்த 87 ரூபா மாதாந்த கட்டணமே தற்போது 330 ரூபாவாக அதிகரிக்கப்படுகிறது.

மின்சார சபை சுமார் 613 பில்லியன் ரூபா நட்டத்தை எதிர்நோக்கியுள்ளது.

மின்சார சபையினால் மேற்கொள்ளக்கூடிய பல்வேறு செயற் திட்டங்கள் தனியார் துறைக்கு வழங்கப்பட்டுள்ளமையும் ஊழியர்கள் அதிகரிப்பும் மின்சார சபை நட்டத்திற்கு காரணமாகும். 15,000 ஆக இருந்த ஊழியர்களின் தொகை கடந்த காலங்களில் 26,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும் மின்சார துண்டிப்பு, மரங்களை தரித்தல் போன்ற செயல்பாடுகள் கூட தனியாருக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இத்தகைய நிலைமைகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

கடந்த காலங்களில் மின் உற்பத்தி திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்ட போதும் சம்பூர் போன்ற மின் உற்பத்தி திட்டங்களை ஆரம்பிக்க முற்பட்ட போதும் எதிர்க்கட்சியினர் எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர்.எனினும் அதற்கு பதிலாக மாற்று நடவடிக்கை எதையும் அவர்கள் முன் வைக்கவில்லை. மின்சாரத் துறையிலும் எதிர்க்கட்சி தொழிற்சங்கங்கள் தொடர்ந்து எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

மின்சாரதுறையின் முன்னேற்றத்திற்கு அது பெரும் பாதிப்பாக அமைந்துள்ளன என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh

Post a Comment

0 Comments