Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

மத்திய கல்லூரி வளாகத்தில் பூப்பந்து உள்ளக மைதானம் திறந்துவைப்பு...!



காத்தான்குடி பிரதேசத்தின் நீண்டகால தேவையாக கருதப்பட்ட பூப்பந்து உள்ளக மைதானம் காத்தான்குடி மத்திய கல்லூரியில் வெள்ளிக்கிழமை(23) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.



காத்தான்குடி மத்திய கல்லூரியின் அதிபர் எம்.சீ.எம்.ஏ. சத்தார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டதுடன் கெளரவ அதிதியாக காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர் மற்றும் பாடசாலையின் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள், YESDO அமைப்பின் உறுப்பினர்கள், பூப்பந்து விளையாட்டு வீரர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



இந்நிகழ்வில் பூப்பந்து விளையாட்டு வீரர்கள் இடையே நடாத்தப்பட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி நடைபெற்றதுடன் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பிரதம அதிதியினால் வெற்றிக் கிண்ணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.



மேலும் பூப்பந்து விளையாட்டு மைதான உருவாக்கத்தில் பங்களிப்பு செய்தவர்கள் மற்றும் பூப்பந்தாட்ட துறையில் சிறந்து விளங்கிய மூத்த வீரர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.

காத்தான்குடி மத்திய கல்லூரியில் அமைந்துள்ள இப் பூப்பந்து உள்ளக மைதானம் YESDO அமைப்பினால் புனரமைக்கப்பட்டு தொடர்ச்சியாக முகாமைத்துவம் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(எம்.பஹ்த் ஜுனைட்)

Post a Comment

0 Comments