Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

கொழும்பு - கண்டி வீதியில் விபத்து - மூவர் உயிரிழப்பு…!

 

கொழும்பு – கண்டி பிரதான வீதி, கேகாலை – ரங்வல பகுதியில் மூன்று மோட்டார் சைக்கிள்கள் மீது வேன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது பலத்த காயங்களுக்கு உள்ளான மோட்டார் சைக்கிள்களை செலுத்தியவர்கள் கேகாலை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர்களில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த விபத்து சம்பவம் நேற்று (09) வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

கண்டிச் நோக்கி சென்ற வேன் எதிர் திசையில் வந்த மூன்று மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியுள்ளது.

இதனால் பலத்த காயங்களுக்கு உள்ளான ஐவரும் கேகாலை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மூவர் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

துல்ஹிரிய மற்றும் வெயாங்கொடை பகுதியை சேர்ந்த 27 வயதுடையவர்களே விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வேனின் சாரதியின் அதிக வேகம் மற்றும் கவனக் குறைவே விபத்துக்கு காரணம் என பொலிஸ் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சாரதியை கைது செய்துள்ள கேகாலை பொலிஸார் மேலதி விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments