Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

பொருளாதார அபிவிருத்தியில் நாடு பின்னடைய இனவாதமே காரணம்...!

 


பாராளுமன்றத்தில் முஷாரப் MP உரை:

அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளிலேயே முதன்மையான நாடாக பார்க்கப்பட்ட இலங்கை அபிவிருத்தி அடையாத நாடுகளின் நிலைமைகளை நோக்கி பின்னோக்கி தள்ளப்பட்டதற்கான அடிப்படை காரணம் இனவாதமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சாணக்கியனுக்கு இதற்கு பதில் கொடுக்க நான் விரும்பா விட்டாலும் கூட எனக்கு வாக்களித்த பெருவாரியான மட்டக்களப்பு மாவட்ட மக்கள் கேட்பதனால் நான் அவருக்கு பதில் வழங்க வேண்டியுள்ளது.

இந்த நாட்டை அழிக்க ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆயுதம் ஏந்த அடித்தளமிட்டவர்கள் இலங்கை தமிழரசுக் கட்சியினர் தான். தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி மட்டக்களப்பு தமிழ் மக்களின் சாபக்கேடு என சாணக்கியன் கூறியிருந்தார். அவருக்கு தெரியுமோ தெரியாது அவரின் பாட்டனார் மட்டக்களப்பு மாவட்டத்திலே பாலம் கட்ட வேண்டாம் சிங்களவன் வந்து விடுவான், கிராமங்களிலே குளம் அமைக்க வேண்டாம் சிங்களவன் வந்து குடியேறி விடுவான் உங்கள் பிள்ளைகளுக்கு சிங்களம் கற்பிக்க வேண்டாம் தனியே தமிழ் மட்டும் கற்பித்தால் போதும் ''என்று கிராமம் கிராமமாக போய் முழங்கியவர். அப்படி முழங்கிய அவரது வாரிசுகள் ஆங்கிலமும் சிங்களமும் மட்டுமே நன்றாக பேசுகின்றனர்.

வட்டுக்கோட்டை தீர்மானம் எத்தகைய இரத்தக்களரியை ஏற்படுத்தியது என்பதனை மறந்து விட முடியாது. கிழக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வடக்கில் போய் போராட, அங்கிருந்து 05 இலட்சம் 10 இலட்சம் பேர் வெளிநாடுகளுக்கு போய் வாழ்கின்றபோது இரண்டாவது தலைமுறையை நோர்வேயிலும் ஐரோப்பாவிலும் போய் நீங்கள் சந்தித்துவிட்டு அவர்கள் உங்களுக்கு நிதி தருவார்களாம் என்று கூறுகிறீர்கள்.

தமிழரசுக்கட்சிக்காரர்களுக்கு நான் சவால் விடுகின்றேன். உங்களிடம் பேசியவர்களிடமிருந்து உங்களால் முடிந்தால் கிழக்கு மாகாணத்தில் 500 பேருக்கு வேலைவாய்ப்புக்கொடுத்தால் நீங்கள் சொல்வதைக் கேட்பதற்கு நான் தயார்.



தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி மட்டக்களப்பு மாவட்டத்தில் செய்த அபிவிருத்திகளையா சாபக்கேடு என்று கூறுகின்றீர்கள்?

எங்களோடு சேர்ந்து அரசியல் செய்து,ராஜபக்ஷ குடும்பத்தோடு நெருக்கமாக பழகி விட்டு இன்று வெல்வதற்காக தமிழரசுக்கட்சியில் சரணாகதி அடைந்து மேட்டுக்குடி தலைவர்களோடு யாழ்ப்பாணம் சென்று உண்டு மகிழ்ந்துவிட்டு இன்று எங்களை கைகாட்டிப்பேச உங்களுக்கு என்ன அருகதை இருக்கின்றது?.

எமது கட்சியின் தேசிய மாநாட்டுக்கு யாரை அழைக்க வேண்டும் யாரை அழைக்கக்கூடாது என்பது எங்களது தீர்மானம். உங்களின் கடசியின் தலைவர் யார்? பொருளாளர் யார்? எதுவுமே தெரியாது. அந்தக்கட்சியிலிருக்கும் 'சாணக்கியனுக்கு பிள்ளையான் பற்றியோ பிள்ளையானின் கட்சி பற்றியோ பேச அருகதை கிடையாது. கிழக்கு மாகாணத்தில் ஒரு தமிழனும் தனக்கான கட்சி அமைக்க வில்லை. ஆனால் நான் அமைத்தேன். வென்றாலும் தோற்றாலும் கொள்கை மாற மாட் டேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments