Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

சுற்றுலா செல்ல தகுதியான சிறந்த நாடுகள் பட்டியலில் இலங்கை 17வது இடம்...!

 

சுற்றுலா செல்வதற்கு சிறந்த நாடுகள் பட்டியலில் இலங்கையும் இடம்பிடித்துள்ளது.

‘கோண்டே நாஸ்ட் டிரவலர்’ என்ற சுற்றுலா இதழ், தமது வாசகர்கள் தேர்வு செய்த, சுற்றுலா செல்வதற்கு சிறந்த நாடுகள் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இந்த ஆண்டு சுற்றுலா செல்வதற்கு உலக அளவில் சிறந்த 20 நாடுகளின் பட்டியலில் இலங்கை 88.01 புள்ளிகளைப் பெற்று 17-வது இடத்தை பிடித்துள்ளது.

இந்நிலையில், கடந்த ஆண்டு இலங்கை இந்த பட்டியலில் 5-வது இடத்தைப் பிடித்திருந்தது.

சுற்றுலாவை பிரதான வருவாய் ஆதாரமாக கொண்ட இலங்கை, பொருளாதாரத்தில் மீளும் முயற்சியாக மீண்டும் சுற்றுலா துறைக்கு புத்துயிரூட்ட முயன்றுவருகிறது..

இந்த ஆண்டுக்கான, சுற்றுலா செல்வதற்கான சிறந்த நாடுகள் பட்டியலில் முதல் 3 இடங்களை போர்ச்சுக்கல், ஜப்பான், தாய்லாந்து ஆகிய நாடுகள் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh

Post a Comment

0 Comments